இந்தியா, ஜப்பான், சீனா தலைமையிலான கடன் உதவி மாநாடு – ரணில் திட்டம்

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதே ஒரே வழி என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிலமை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியா, ஜப்பான் மற்றும் சீனாவின் தலைமையில் கடன் உதவி மாநாட்டை கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஓகஸ்ட் மாதத்தில் இடைக்கால வரவுசெலவுத் திட்டமும் நவம்பரில் முழு வரவுசெலவுத் திட்டமும் சமர்ப்பிக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிரதமரின் அறிக்கையின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உரையாற்றினார்.

சர்வதேச நாணய நிதியத்தை மட்டும் நம்பியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.