இன்றிரவு 8 மணிக்கு மீளவும் நடைமுறைக்கு வருகிறது ஊரடங்கு

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிகளுக்கு இணங்க நாடுமுழுவதும் இன்று (16) இரவு 8.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் கீழ் தவிர, பொது வீதி, ரயில் பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது வேறு எந்த பொது கடற்கரையிலும் யாரும் தங்க அனுமதிக்கப்படுவதில்லை என்று அந்த அறிவிப்பில் உள்ளது.