இன்று இரவு மீண்டும் எரிபொருள் விலை குறைப்பு?

02 வாரங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு மேற்கொள்ளப்படவுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படுகிறது.

இன்றும் எரிபொருள் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் அறிவித்திருந்தார்.

உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது இந்த நாட்டில் எண்ணெய் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.