இன்று வரவிருந்த பெற்றோல் கப்பல் ஒரு நாள் தாமதமாகும் – இன்றும் நாளையும் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம்

40 ஆயிரம் மெட்ரிக் தொன் 92 ஒக்ரைன் பெற்றோலுடன் இன்று நாட்டை வந்தடையவிருந்த கப்பல் ஒரு நாள் தாமதமாகியுள்ளது.

அதனால் நாடுமுழுவதும் பெற்றோல் விநியோகம் இன்றும் நாளையும் மட்டுப்படுத்தப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும்,  டீசல் விநியோகம் முழுத் திறனில் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுப்பர் டீசல் விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.