இன, மத ஒற்றுமையை சீர்குலைக்கும் நாசகார முயற்சிகளை நிராகரிக்கவேண்டும்- ஜனாதிபதி வலியுறுத்தல்

இன மற்றும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் நாசகார முயற்சிகளை நிராகரிக்குமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு அனைத்து இலங்கையர்களும் கைகோர்க்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.