இரண்டு குற்றச்சாட்டு வழக்குகளில் ரிஷாத் பதியுதீனுக்கு பிணை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சுமார் ஆறு மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதிவான் பிரியந்த லியனகே, 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

- Advertisement -

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஏப்ரல் 21ஆம் திகதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, அவரது வீட்டில் பணிபுரிந்த ஜூட் குமார் இசாலினி என்ற 16 வயது சிறுமி தீக்குளித்த வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் அவரை தலா ஒரு மில்லியன் ரூபா இரண்டு ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதிவரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!