இரு வாரங்களுக்கு இணையவழி கல்வி; வீட்டிலிருந்து வேலை – அரசின் இறுதி முடிவு நாளை

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு திங்கள்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு பாடசாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கான இணைய வழிமுறையை மீண்டும் அறிமுகப்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது.

மற்றும் பிற ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அரச தரப்பு தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடக ஊடகவியலாளர் தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போதைக்கு ஊரடங்கு உத்தரவு எதுவும் விதிக்கப்படாது என அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமா என சில அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், இருவரும் எதிர்மறையாக பதிலளித்துள்ளனர்.

எரிபொருள் கப்பல் அடுத்த வாரம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.