இறக்குமதியாகும் பொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் 15-200 சதவீதம் வரை உயர்வடைகின்றன

இன்று இரவு முதல் புதிய சிறப்புப் பொருள்கள் வரி விதிப்பின் கீழ் அனைத்து இறக்குமதிகளின் விலைகளும் 15 முதல் 200 சதவீதம் வரை உயரும் என்று நிதி அமைச்சின் அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான டயர்கள் மீதான வரி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன.

வளிச்சீராக்கிகள் (A/C), சலவை இயந்திரங்கள், ரைஸ் குக்கர், மைக்ரோவேவ், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் அலைபேசிகள் மீதான வரி 100 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளன.

மின்சாதனங்கள் 15 சதவீதம் உயர்ந்துள்ளன.

சொக்லேட்களின் விலைகள் 200 சதவீதத்தினால் உயர்வடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் தயிர், பட்டர் மற்றும் பால் பொருள்கள் மீதான சிறப்பு பொருள்கள் ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.