இலங்கைக்குள் நுழைய முற்பட்ட 86 இந்தியர்கள் வடக்கு கடற்பரப்பில் தடுப்பு- கடற்படை அறிக்கை

சட்டத்துக்குப் புறம்பாக இலங்கைக்குள் நுழைய 86 இந்தியர்கள் மேற்கொண்ட முயற்சியை முறியடித்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

- Advertisement -hnb-2021

சட்டத்துக்குப் புறம்பான குடியேற்றவாசிகள் இலங்கை கடலுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக பாக்கு நீரிணையில் கடற்படை நடத்திய சிறப்பு ரோந்துகள் காரணமாக 86 சந்தேக நபர்களுடன் சந்தேகிக்கப்படும் 11 இந்திய மீன்பிடிக் கப்பல்கள் இன்று செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டன.

இலங்கைக்கு குடியேற்றவாசிகள் கடல் வழியாக நுழைவதால் நாட்டில் கோவிட் – 19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க 24 மணி நேர ரோந்துப் பணிகளை அதிகரிப்பதன் மூலம் வடமேற்கு மற்றும் வடக்குக் கடற்பரப்பில் கடற்படை பாதுகாப்பை முடுக்கிவிட்டுள்ளது.

மன்னாருக்கு தெற்கே உள்ள இந்த சிறப்பு ரோந்துப் பணியின் போது, ​​இலங்கை கடலுக்குள் நுழைய முயன்றதாக சந்தேகிக்கப்படும் 11 இந்திய மீன்பிடிப் படகுகள் கடற்படை ரோந்து காரணமாக இலங்கை கடலுக்குள் நுழைவதைத் தடுக்கப்பட்டன.

இந்தியத் தூதுவர் மற்றும் இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் அளிக்கப்பட்டு 11 இந்திய மீன்பிடிப் படகுகளையும் 86 நபர்களையும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சட்டத்துக்குப் புறம்பான குடியேற்றவாசிகளின் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கடற்படை வடமேல் மற்றும் வடக்கு கடற்பரப்பில் ரோந்து பணிகளை முன்னெடுத்து வருகிறது- என்றுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!