இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை உலக வங்கி அடுத்த வாரம் ஒப்புதல் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 28ஆம் திகதியன்று இலங்கைக்கான வரவு-செலவு மற்றும் நலன்புரி ஆதரவில் 700 மில்லியன் டொலர்களை உலக வங்கி அங்கீகரிக்கும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு பின்னர் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கான மிகப்பெரிய நிதி பங்களிப்பாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.