இலங்கையரை படுகொலை செய்ததாக பாகிஸ்தானில் 6 பேருக்கு தூக்கு; 7 பேருக்கு ஆயுள் தண்டனை

பாகிஸ்தானின் சியால்கோட்டில் இலங்கை குடிமைகன் பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 எதிரிகளுக்கு லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.

மேலும் ஏழு எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 76 எதிரிகளுக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு டிசெம்பர் 3ஆம் திகதி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையரான பிரியந்த குமார, வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்த குமார தியவடன என்ற நபர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடன கனேமுல்ல நகரின் அருகே உள்ள கெந்தலியத்த பகுதியைச் சேர்ந்தவர்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பட்டதாரியான இவர், 2010ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் சியால்கோட் நகரிலுள்ள தனியார் ஏற்றுமதி தொழிற்சாலையொன்றில் முகாமையாளராகக் கடமையாற்றினார்.

இவர் இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனையில் ஈடுபட்டதாக 2021 டிசெம்பர் 3ஆம் திகதி காலை தகவல் பரவியது.

“தொழிற்சாலையில் இந்தத் தகவல் பரவியதும் ஏராளமான ஊழியர்கள் தொழிற்சாலை முன்பு, திரண்டு போராட்டம் நடத்தினர். பின்னர் பிரியந்த குமார தியவடனவை உடல் ரீதியான துன்புறுதலுக்கு உள்ளாக்கி எரித்துக் கொன்றனர்.