இலங்கையின் முஸ்லிம் திருமணங்கள் மற்றும் மணநீக்கத்தை பொதுவான சட்டத்தின் கீழ் அனுமதிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல்

முஸ்லிம் திருமணம் மற்றும் மணநீக்கம் சட்டத்திலுள்ள (Muslim Marriage and Divorce Act) விதிகள் பெண்களுக்கு பாகுபாடு காட்டுவதால், திருமண பதிவு கட்டளைச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்களை திருமணம் செய்ய அனுமதிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசியலமைப்பின் 12ஆவது பிரிவின் கீழ் எந்தவொரு குடிமகனும் இனம், மதம், மொழி, சமூக, பாலினம், அரசியல் கருத்து அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படமாட்டாது என்று அமைச்சரவை அறிக்கை கூறியுள்ளது.

- Advertisement -

எவ்வாறாயினும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு பெண்கள் அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டபடி முஸ்லிம் திருமணம் மற்றும் மணநீக்கம் சட்டத்திவ் பெண்களுக்கு பாகுபாடுகாட்டும் விதிகள் உள்ளன.

முஸ்லிம் ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் உரிமை அமைப்புகள் பல ஆண்டுகளாக முஸ்லிம் திருமணம் மற்றும் மணநீக்கம் சட்டத்தில் சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இது 1951ஆம் ஆண்டிலிருந்து ஆண்களால் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டமாகும்.

“எனவே, இலங்கை குடிமக்களின் திருமணம் மற்றும் மணநீக்கத்தை நிர்வகிக்கும் பொதுவான சட்டத்தின் கீழ், முஸ்லிம் சமூகத்தின் மக்களின் திருமணம் மற்றும் மணநீக்கத்தை நிர்வகிக்க மாற்று வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவது பொருத்தமானதாகிவிட்டது” என்று அமைச்சரவை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நீதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முஸ்லிம்கள் திருமண பதிவு கட்டளைச் சட்டத்தை திருமணம் செய்து கொள்ள உதவும் திருமண நடைமுறைகளைக் கொண்ட சிவில் நடைமுறைக் கோவை மற்றும் சிவில் நடைபடிமுறைக் கோவை ஆகியவற்றில் திருத்தம் செய்ய அமைச்சர் சப்ரி முன்மொழிந்தார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!