இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் அர்ஜுனா மீது பாலியல் குற்றச்சாட்டு: இந்திய விமானப் பணிப் பெண் பேஸ்புக்கில் பதிவு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜூனா ரனதுங்கா மீது இந்தியாவைச் சேர்ந்த விமானப் பணிப் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

- Advertisement -

பொலிவுட்டில் தொடங்கி தற்போது இந்தியாவின் அனைத்து துறைகளிலும் பரவி வரும் ‘மீ டூ’ (நான்கூட) பரப்புரையின் நீட்சியாக அர்ஜூனா ரணதுங்கா மீதான இந்தக் குற்றச்சாட்டும் வெளிவந்துள்ளது.

1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற இலங்கை அணியின் தலைவர் அர்ஜுனா ரணதுங்கா. இவர், 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 ஆயிரத்து 105 ஓட்டங்களும், 269 ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரத்து 456 ஓட்டங்களும் குவித்திருக்கிறார்.
இலங்கையில் மிகவும் போற்றக்கூடிய கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான இவர் தற்போது பெற்றோலிய வளங்கள் அமைச்சராக இருக்கிறார்.

இவர், இந்தியாவுக்கு வந்திருந்த போது தன் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக விமானப் பணிப் பெண் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர், அந்தப் பதிவில் அர்ஜூனா ரணதுங்கா மட்டுமில்லாது பாலியல் ரீதியில் சீண்டிய பல நபர்களை குறிப்பிட்டுள்ளார்.

அவர், அர்ஜூனா ரணதுங்கா குறித்து பதிவிட்டுள்ள பதிவின் சுருக்கம்,

“அர்ஜூனா ரணதுங்கா என் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அப்போது, நான் அவரது காலில் உதைத்து அச்சத்தில் கத்தினேன்.
இந்தியரிடம் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தவறாக நடந்துக்கொள்வதால், பொஸாரிடம் தெரிவிப்பது, கடவுச்சீட்டை தடை செய்யப்படுவது என கடுமையான விளைவுகள் குறித்து அவரை மிரட்டினேன்.
அதையடுத்து, உடனடியாக விடுதி வரவேற்பு அறைக்கு சென்று இதுதொடர்பாக தெரிவித்தேன். அவர்கள், இது உங்களது தனிப்பட்ட விடயம், எங்களால் உதவி செய்ய முடியாது என்று தெரிவித்தனர்” என்று பதிவிட்டிருக்கிறார்.

வைரலாகி வரும் #MeToo ஹாஷ்டேக்! காரணம் என்ன?

கடந்த ஓரிரு தினங்களாக #MeToo என்னும் ஹாஷ்டேக் வைரலாகி வருகிறது. ஆண்களால் ஏதோவொரு வகையில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் #MeToo என்னும் ஹாஷ்டேகை பதிவிட்டும், அதனுடன் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தும் வருகிறார்கள்.

இந்தப் பரப்புரை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின் தற்போது அது பிரபலமாகி உள்ளது.

குறிப்பிட்ட நகரம் என்றல்லாது உலகம் முழுவதுமே பெண்கள் ஆண்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கும், சீண்டலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகி வருகிறார்கள். அது பெண்களின் வீடாகவோ, பேருந்திலோ, இரயிலிலோ, பள்ளி, கல்லூரி அல்லது அலுவலகமாகவோ இருக்கலாம்.

கடந்த ஒரு சில தினங்களாக #MeToo என்னும் ஹாஷ்டேக் கீச்சகம் (ட்விட்டர்) மற்றும் முகநூல் ஆகிய சமூக வலைதளங்களில் உலகமெங்கும் வைரலாகி வருகிறது. ஹோலிவுட் நடிகைகள் முதல் சாமானிய மக்கள் வரை என பல்வேறு தரப்பினர் தங்களுடைய அனுபவங்களுடன் #MeToo என்ற ஹாஷ்டேகையும் பதிவிட்டு வருகிறார்கள்.

இது எங்கே, எப்படி ஆரம்பித்தது?

2017ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதமளவில் அமெரிக்காவின் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வு, துன்புறுத்தல், சீண்டல் உள்ளிட்ட பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளை அளித்து வந்தாகள்.

ஹார்வி மீது முறைப்பாடு தெரிவித்தவர்களில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி மற்றும் ரோஸ் மெக்கோவன் உள்ளிட்ட பலர் அடங்குவர்.

ஹார்வி, தன் மீது குற்றஞ்சாட்டியவர்களின் ஒப்புதலோடுதான் தான் பாலியல் உறவு கொண்டதாக கூறினாலும், தொடர் முறைப்பாடுகளின் காரணமாக அவர் அங்கம் வகிக்கும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பதவிகளில் இருந்தும் அவர் விலக்கி வைக்கப்பட்டார்.

ஹார்வியின் முறைப்பாடுகளை மையமாக வைத்து, ஹாலிவுட் நடிகையான அலிஸ்ஸா மிலானோ என்பவர், “பாலியல் ரீதியான தொந்தரவுக்கோ அல்லது தாக்குதலுக்கோ உள்ளான அனைத்து பெண்களும் “Me Too” என்று பதிவிட்டால், இப்பிரச்சனையின் அளவை மக்களுக்கு உணர வைக்கலாம்” என்று 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் #MeToo என்ற ஹாஷ்டேகுடன் தங்களது கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Alert: Content is protected !!