இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் (SLRCS) தலைவராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் தெரிவாகியுள்ளார்.
நேற்று (ஜூன் 24) இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் சபை கூடி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான தலைவர் மற்றும் பெதுச்சபை தெரிவு செய்யப்பட்டது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராக மத்திய குழுவின் மூத்த உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக தொண்டர், பிரிவுத்தலைவர், கிளைத்தலைவராக தொண்டாற்றி இன்று இலங்கைக்கான தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தலைவர் கே.பாலகிருஷ்ணன், யாழ்ப்பாணக் கிளையின் தலைவராக இருந்த காலத்தில்தான் ஏ9 முதன்மை வீதியில் கச்சேரிக்கு அண்மையாக எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை உருவாக்கி, அதனூடாகப் பெறப்படும் இலாபத்தில் பல சமூக சேவைகளை ஆற்றுவதற்கு ஆணிவேராக இருந்து செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
