Tuesday, December 5, 2023
Homeஉள்ளூர் செய்திகள்இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் வடக்குக்கு வருகை; 3 நாள்களுக்கு பலதரப்பினரையும் சந்திப்பார்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் வடக்குக்கு வருகை; 3 நாள்களுக்கு பலதரப்பினரையும் சந்திப்பார்

வடக்கு மாகாணத்தில் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் நேரில் ஆராய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் றோகினி மாரசிங்க தலைமையிலான குழுவினர் வருகை தரவுள்ளனர்.

நாளை (பெப்ரவரி 16) வியாழக்கிழமை தொடக்கம் வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை வரை அவர்கள் வடக்கு மாகாணத்தில் பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அறிவித்துள்ளார்.

இந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வருகை மற்றும் சந்திப்புக்களின் முதன்மை நோக்கம் வடக்கு மாகாணத்தின் மனித உரிமைகள் தொடர்பில் தற்போதைய களநிலவரத்தை ஆராய்வதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular