பிரிட்டனில் பரவும் புதிய வகை கோரோனா வைரஸுடன் இலங்கைக்கு வந்த அந்த நாட்டு கிரிக்கெட் வீரர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர், ஹேமந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வகை கோரோனா வைரஸ் கவனம் பெறுகிறது
- இந்த புதிய வகை கோரோனா வைரஸ், மற்ற ரக வைரஸ்களை விட அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.
- இந்த வகை வைரஸின் முக்கிய பகுதியில் மரபியல் மாற்றங்கள் நடந்திருக்கிறது.
- இதில் சில மரபியல் மாற்றங்கள், முன்பே சோதனை கூடங்களில் காணப்பட்டன. புதிய ரக கோரோனா வைரஸில் காணப்படும் இந்த மாற்றங்களில், மனித செல்களை பாதிக்கும் தன்மை அதிகமாக இருக்கின்றன.
புதிய வகை கோரோனா வைரஸ், அதிகமாக பரவும் கோரோனா வைரஸ் ரகங்களில் ஒன்றாக மாற வாய்ப்பிருக்கிறது. சரியான நேரத்தில் சரியான இடத்தில் பரவுவதன் மூலம் இது சாத்தியமாகும்.
உதாரணத்துக்கு லண்டனில் சமீப காலம் வரை, இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகள் தான் நடைமுறையில் இருந்தன. இந்த நகரத்தில், புதிய ரக கோரோனா வைரஸ் பரவினால், அது எளிதில் பிரிட்டன் முழுக்க அதிகமாக பரவ வாய்ப்பிருக்கிறது.

இந்த புதிய ரக கோரோனா வைரஸ் பரவலைக் குறைக்க, பிரிட்டனின் பல பகுதிகளிலும் நான்காம் கட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.