இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகளால் மேற்கொள்ளப்படும் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது குற்றங்களை தெரிவிப்பதற்கான அலைபேசி செயலியை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இந்த செயலியின் ஊடாக எந்தவொரு சம்பவத்தையும் பொதுமக்கள் நேரடியாக சபைக்கு தெரிவிக்க முடியும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபை சாரதிகளினால் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து விதிமீறல்களை ஆவணப்படுத்துவதற்கும் இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு சாரதியின் போக்குவரத்து விதிமீறல்களையும் ஆவணப்படுத்த புத்தகமொன்று பராமரிக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இது மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டதாகவும், பேருந்துகளில் ஏற்படும் விபத்துக்களைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான வாகனம் ஓட்டுவதை ஊக்குவிப்பதற்காகவும் எடுக்கப்பட்டதாக சபை தெரிவித்துள்ளது.
பொலிஸாரின் தரவுகளின்படி, இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் இந்த வருடத்தில் இதுவரை குறைந்தது 218 விபத்துக்களில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.