உயிர்களைப் பாதுகாக்க அனைத்து வைபவங்களையும் ஒத்திவையுங்கள்- இந்துமதத் தலைவர்கள் வலியுறுத்து

சகல வைபங்களையும் ஒத்திவைத்து உயிர்களைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழையுங்கள் என்று நல்லை ஆதினம் வலியுறுத்தியுள்ளது.

நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், இந்து மா மன்றின் உப தலைவர், சென்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் மற்றும் சிவதொண்டன் சுவாமிகள் இணைந்து வலியுறுத்தியுள்ளனர்.

- Advertisement -hnb-2021

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பாரத தேசத்திலும் எங்கள் மண்ணிலும் கோரோனா என்னும் கொடிய தொற்றுநோய் தாண்டவமாடுகின்றது. பாரத தேசத்தில் பல ஆயிரக் கணக்கான மக்கள் மடிந்து வீழ்ந்து இறப்தை நான் காண்கின்றோம்.

பாரத தேசத்திலும் எங்கள் மண்ணிலும் கோரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலன் பெற நாளை முதல் நண்பகல் 12 மணிக்கு மணி ஓசையை ஒலிக்கச் செய்து பிராத்தனை செய்யுங்கள்.

ஆலயங்களில் நாளாந்த பூசை, நித்திய நைமித்திய வழிபாடுகளைச் செய்யுங்கள். அடியவர்கள் ஆலயங்களில் கூடுவதைத் தவிருங்கள்.

பொதுமக்கள் வீட்டுக்கு வெளியில் செல்வதை இயன்றவரை கட்டுப்படுத்துங்கள்.

சுகாதார மருத்துவ சமூகத்தின் வேண்டுதலுக்கு அனைவரும் மதிப்பளித்து பாதுகாப்பாகச் செயற்படுங்கள்.

சகல வைபங்களையும் ஒத்திவைத்து உயிர்களைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழையுங்கள்.

பாரத தேசத்தில் மக்கள்படும் அவலம் ஓயவேண்டும்படி அனைவரும் வீடுகளில் பிராத்தனை செய்யுங்கள்.

தெருக்களில் கூடுவதையோ தெருவோர வியாபாரம் செய்வதையோ சுகாதாரத்துக்கு இடையூறாக நடப்பதையோ அனைவரும் தவிருங்கள் – என்றுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!