உலக சுகாதார நிறுவனம் அனுமதித்த தடுப்பூசியைப் பெற்றவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி

உலக சுகாதார நிறுவனத்தால் அவசர பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு அலகுகளையும் பெற்ற சர்வதேச சுற்றுலா பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளின் இரண்டு அலகுகளையும் பெற்றவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியும்.

- Advertisement -

அதன்படி, அமெரிக்க சுகாதார அதிகாரிகள் அல்லது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட 6 கோவிட்-19 தடுப்பூசிகளில் ஒன்றின் இரண்டு அலகுகளையும் பெற்றவர்கள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்படி, ஃபைசர், மாடர்னா, ஜோன்சன் & ஜோன்சன், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனேகா, சினோபார்ம் மற்றும் சினோவக் ஆகியவற்றில் ஒன்றின் இரு அலகுகளையும் பெற்றவர்கள் அமெரிக்காவில் நுழைய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!