உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் நாட்டிலுள்ள எந்தவொரு வங்கியிலும் வைப்புத்தொகை பாதிக்கப்படாது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார்.
சிறப்பு அறிக்கையொன்றை விடுத்துள்ள இலங்கை மத்திய வங்கி ஆளுநர் வீரசிங்க, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்கு தேவையான கால அவகாசத்தை பெற்றுக் கொள்வதற்காக ஜூன் 29ஆம் திகதி முதல் ஜூலை 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்ட வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடப்பட்ட உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவதற்கான மூலோபாயத்திற்கு போதுமான நாட்களை உருவாக்குவதே ஜூன் 30ஆம் திகதி வங்கி விடுமுறை அறிவிக்கப்படுவதற்கான முதன்மை காரணம் என ஆளுநர் தெரிவித்தார்.
மேலும், ஜூன் 30 ஆம் திகதி வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த காலப்பகுதியில் வங்கிகள் திறந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் இணைய வங்கிச் சேவை, பணப்பரிமாற்றம் மற்றும் தன்னியக்க பணப்பரிமாற்றம் திரும்பப் பெறுதல் போன்ற அனைத்து வங்கிச் செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியும் என மத்திய வங்கி ஆளுநர் வீரசிங்க தெரிவித்தார்.
வர்த்தக வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிறுவனங்களில் மக்கள் வைத்திருக்கும் வங்கி வைப்புத்தொகைகளில் குறைப்பு ஏற்படாது எனவும், தற்போது பெற்றுக்கொண்டிருக்கும் வட்டி விகிதங்களில் குறைப்பு ஏற்படாது எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டுக் கடன் மேம்படுத்தப்பட்டாலும், குறிப்பிட்ட வட்டி விகிதங்களை வழங்க வங்கிகள் ஒப்புக்கொண்டால், வைப்பாளர்கள் அதே விகிதத்தைப் பெறுவார்கள் என்று ஆளுநர் கூறினார்.
இதற்கிடையில், நீண்ட வங்கி விடுமுறை காலம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர், மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சுடன் கலந்துரையாடப்பட்ட உள்நாட்டு கடன் மேம்படுத்தல் மூலோபாயத்திற்கு போதுமான நாட்களை உருவாக்குவதே சிறப்பு வங்கி விடுமுறை அறிவிப்பிற்கு முக்கிய காரணம் என்றார்.
இந்த கடன் மூலோபாயம் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு, அமைச்சரவை, குழுக்கள் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களில் இருந்து முறையான ஒப்புதல் செயல்முறையைப் பெற வேண்டும் என்று ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறினார்.