உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு திட்ட முன்மொழிவு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இன்று (01) இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.