Friday, September 22, 2023
Homeஅரசியல்உள்ளூராட்சித் தேர்தலை நடத்த 770 மில்லியன் ரூபாவை விடுவிக்க நிதி அமைச்சிடம் கோரிக்கை

உள்ளூராட்சித் தேர்தலை நடத்த 770 மில்லியன் ரூபாவை விடுவிக்க நிதி அமைச்சிடம் கோரிக்கை

மார்ச் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக 770 மில்லியன் ரூபாவை விடுவிக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, நிதி அமைச்சின் செயலாளரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆரம்ப செலவீனங்களுக்காக 770 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக ஆணைக்குழு மதிப்பிட்டுள்ளது.

எனவே, இந்த மாதத்திற்குள் நிதியை மொத்தமாகவோ அல்லது பகுதிகளாகவோ வழங்குமாறு நிதி அமைச்சிடம் தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular