உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக தேசிய தேர்தல் ஆணைக்குழு வரும் திகதி கூடும் என்று அறிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள திறைசேரியின் செயலாளர், அரச அச்சக அதிகாரி மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 9ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களினால் வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
எனினும் தேர்தலை நடத்துவதற்கான நிதியை விடுவிக்க திறைசேரி மறுத்தமையினால் நிர்ணயித்த திகதியில் தேர்தலை நடத்த முடியாது என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய ஆணைக்குழு வரும் 7ஆம் திகதி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.