உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி அதிகாரத்தை நீடிக்கும் அரசிதழ் பிரகடனம் ஒப்படைப்பு

உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி அதிகார காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பது தொடர்பான அதிசிறப்பு அரசிதழ் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் அரச அச்சகத் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஓராண்டு பிற்போட்டப்பட்டால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி கட்டாயமாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதுவரை தற்போது ஆட்சியில் உள்ள சபைகளின் ஆட்சி அதிகாரம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு அரசிதழ் மூலம் பிரகடனம் செய்துள்ளது.

2262/10 என இலக்கமிடப்பட்ட 2022.01.10ஆம் திகதிய அதிசிறப்பு அரசிதழ் அடுத்த சில மணித்தியாலங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.