உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அரசிதழ் அறிவித்தல் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் எஞ்சியுள்ள உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும், அது தொடர்பான அரசிதழ் இதுவரை வெளியிடப்படவில்லை.