எதிர்வரும ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கிறது.
இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது, தேர்தல் அடுத்த மாதம் 25ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவத்தாச்சி அதிகாரிகளுக்கு அறிவித்தது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பான தேர்தல் செயலகத்தில் இன்று பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முதலில் மார்ச் 9ஆம் திகதி நடைபெறவிருந்தது. ஆனால் தேவையான நிதிகளை விடுவிக்க திறைசேரி மறுத்ததால் ஒத்திவைக்கப்பட்டது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை மாற்றியமைத்தல் குறித்து விவாதிக்க தேர்தல. ஆணைக்குழு கடந்த வாரம் (மார்ச் 3) கூடியது. இருப்பினும், உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவைத் தொடர்ந்து, முடிவு ஒத்திவைக்கப்பட்டது.
2023 வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் தேர்தல்களை நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை நிறுத்தி வைப்பதில் இருந்து நிதி அமைச்சின் செயலாளரைத் தடுக்கும் உத்தரவை கடந்த வாரம் உயர் நீதிமன்றம் வெளியிட்டது.
நீதியரசர்கள் ப்ரீதி பத்மேன் சுரசேனா, ஜனக் டி சில்வா மற்றும் பிரியந்தா பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மூன்று உறுப்பினர் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு நிதி அமைச்சர் ரணில் விக்ரமசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மகிந்த சிறிவர்தன ஆகியோருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வாக்குச்சீட்டு ஆவணங்களை அச்சிடுவதற்காக தக்கவைக்கப்பட்ட நிதியை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2023 வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் தேர்தல்களை நடத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவுக்கான நிதியை விடுவிப்பதற்கு தடை ஏற்படுத்தும் முடிவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரால் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நிதியை வழங்கக்கூடாது என்ற முடிவின் மூலம் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று மனுவில் வலியுறுத்தப்பட்டது.
திறைசேரியின் செயலாளர் மற்றும் பிற பதிலளித்தவர்களின் முடிவு அடிப்படை உரிமைகளை மீறுவதாக ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.
நிதி அமைச்சின் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் மற்றும் பலர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.