உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (21) நண்பகலுடன் நிறைவடைந்தது.
ஜனவரி 18ஆம் திகதி புதன்கிழமை முதல் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களினால் மாவட்ட மற்றும் பிரதேச செயலக அலுவலகங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.
இதேவேளை, தேர்தலுக்கான கட்டுப்பணங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று (20) நண்பகலுடன் நிறைவடைந்தது.