Friday, September 22, 2023
Homeஅரசியல்உள்ளூர் பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இலங்கை அனுமதிக்கலாம்

உள்ளூர் பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இலங்கை அனுமதிக்கலாம்

இந்திய ரூபாயை உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த அனுமதிப்பது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

“இந்தியாவின் நாணயத்தை பயன்படுத்த அனுமதிக்கும் நடவடிக்கையானது, இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் பிற மக்களும், பல நாணய மாற்றங்களின் தொந்தரவு இல்லாமல் நேரடியாக இந்திய ரூபாயை இங்கு பயன்படுத்த முடியும்” என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

உணவு, மருந்துப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், உரங்கள் மற்றும் இரசாயனங்கள் உட்பட அதன் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியான இந்தியாவிலிருந்து இலங்கை ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்கிறது.

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2021 இல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 5.45 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக சமநிலையின்மை இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதால் இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்வது இலங்கைக்கு சாதகமாக அமையும் என்று அமைச்சர் சப்ரி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவிற்கு பயணம் செய்த ஒரு நாள் கழித்து வெளிவிவகார அமைச்சர் சப்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்களுக்கு அதிக இந்திய நாணயம் தேவைப்படுகிறது, எனவே அதிகமான இந்தியர்கள் இங்கு வந்து இந்திய நாணயத்தை செலவழிப்பது எங்களுக்கு நல்லது என்று சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular