ஊரடங்குச் சட்டத்தை மீள நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தீர்மானம் இல்லை

இன்று (மே 15) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீள நடைமுறைப்படுத்துவதற்கான எந்தத் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

நாடுமுழுவதும் கடந்த மே 9ஆம் திகதி இரவு 7 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளாந்தம் பகல் நேரத்தில் தளர்த்தப்பட்டது.

நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த இன்று (மே 15) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படும் என்று நேற்றுமுன்தினம் அறிவித்த ஜனாதிபதி ஊடகப் பிரிவு, தற்போது வரை நீடிப்புத் தொடர்பான அறிவித்தலை விடவில்லை.

இந்த நிலையிலேயே ஊரடங்குச் சட்டம் நீடிப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.