Saturday, September 23, 2023
Homeஉள்ளூர் செய்திகள்ஊர்தியை தாடியில் கட்டியிழுத்து சாதனை; மட்டுவிலில் அரங்கேறியது

ஊர்தியை தாடியில் கட்டியிழுத்து சாதனை; மட்டுவிலில் அரங்கேறியது


7 நிமிடங்கள் 48 செக்கன்களில் ஆயிரத்து 550 கிலோ கிராம் எடை கொண்ட ஊர்தியை 400 மீற்றர் தூரம் தாடியால் இழுத்து தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த 59 வயதான செ.திருச்செல்வம் உலக சாதனை படைத்துள்ளார்.

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று (ஜூலை 9) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தென்மராட்சி-மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற உலக சாதனை நிகழ்வில் முதன்மை விருந்தினராக தொழிலதிபர் அ.கிருபாகரன் கலந்து சாதனை நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்தார்.

மேலும் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி, ஈ.சிற்றி ஆங்கில கல்லூரியைச் சேர்ந்த றஜீபன் ஆகியோரும்,

அதிதிகளாக பன்னாட்டு எம்.ஜி.ஆர் பேரவைத்தலைவர் ம.விஜயகாந்த், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் தி.தங்கவேலு,ஊடகவியலாளர் முகுந்தன், சாதனையாளரின் நண்பன் தையிட்டி இ.சிவானந்தம் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவன இலங்கை கிளை தலைவர் யோ.யூட் நிமலன், சந்திரபுரம் கிராம அலுவலர் சுபாசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular