எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் பாடசாலைகளை நடத்துவது எவ்வாறு? இன்று இறுதித் தீர்மானம்

எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் பாடசாலைகளை நடத்துவது எவ்வாறு என்ற தீர்மானம் இன்று வெளியாகவுள்ளது.

கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு இடையில் இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் தீர்மானம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக பொதுப் போக்குவரத்து சேவைகளின் மோசமான செயற்பாடுகளை கருத்தில் கொண்டு அது வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் தவிர்ந்த ஏனைய ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை கட்டுப்படுத்தும் சுற்றறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

.