எரிபொருளுக்கு தட்டுப்பாடு; கொழும்பு பாடசாலைகள் ஒரு வாரத்துக்கு மூடப்படும்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு கொழும்பு நகர எல்லையிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளையும் மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.