எரிபொருள், எரிவாயு வாங்க கட்டாரிடம் கடன் உதவி கோரிக்கை

கட்டார் நாட்டிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கையுடன் எரிபொருள் மற்றும் எரிவாயுவை கடன் அடிப்படையில் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

அபிவிருத்திக்கான கட்டார் நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பொருள்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதிகள் கோரியிருந்தால் அது பரிசீலிக்கப்படும் என்றும் கட்டார் அபிவிருத்திக்கான நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் அமைச்சரிடம் தெரிவித்தார்.