எரிபொருள் கப்பல்கள் வரும் காலப்பகுதியை பிரதமர் அலுவலகம் சொல்கிறது

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்தி பணிப்பாளர்கள் குழுவை சந்தித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, எரிபொருள் நெருக்கடியை தீர்க்க எடுக்கப்பட்டுள்ள அவசர நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

பிரதமரின் மூத்த பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச். சமரதுங்க விளக்கினார்.

நாட்டின் தற்போதைய எரிபொருளின் நிலை குறித்து பிரதமரின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

ஜூலை 11 தொடக்கம் 15ஆம் திகதிக்குள் 38 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் கப்பல் இலங்கை வந்தடையவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

ஜுலை 22ஆம் திகதி 33 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோல் நாட்டிற்கு வரவுள்ளதாக சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்துடன், 3 ஆயிரத்து 700 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு கப்பல் ஜூலை 6ஆம் திகதி இலங்கை வந்தடையும் என்று எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசு எரிபொருள் இறக்குமதியை முன்கூட்டியே பெற முயற்சிப்பதாகவும், ஆனால் அவை உறுதிப்படுத்தப்படும் வரை தகவலை வெளியிடாது என்றும் சாகல ரத்நாயக்க விளக்கினார்.