எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளவேண்டாம் என்று எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர கேட்டுள்ளார்.
நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது மற்றும் விநியோகம் தொடரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் ஊழியர்களை கடமைக்கு வரவிடாமல் பலவந்தமாக தடுத்ததன் காரணமாக முன்னர் தாமதமாகி வந்த எரிபொருள் விநியோகம் டெர்மினல்கள் மற்றும் விநியோகங்களில் தேவையான பாதுகாப்பை பொலிஸார் மற்றும் படையினர் வழங்குவதன் மூலம் இயல்பாக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.