எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு தேடி அமைச்சர்கள் மூவர் வெளிநாடு பயணம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் பல அமைச்சர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர்.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று இரவு கட்டார் சென்றுள்ளார்.

அவருடன் சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அகமதுவும் அதே விமானத்தில் டோகா சென்றிருந்தார்.

வழக்கமான எரிபொருள் வழங்குநர்களைக் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் கத்தாருக்கு பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளனர்.

மேலும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் இன்று காலை டுபாய் ஊடாக பிரான்ஸ் சென்றுள்ளார்.

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க உள்ளிட்ட குழுவினர் ஜூலை 3ஆம் திகதி ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு செல்ல உள்ளனர்.