எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தியது பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

நாட்டில் நிலவும் தற்போதைய நிலமை மற்றும் ஊரடங்குச் சட்டம் காரணமாக எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் தனியார் பவுசர்கள் சங்கம் விநியோக நடவடிக்கையை இடைநிறுத்துவதாக அறிவித்திருந்த நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.