Wednesday, December 6, 2023
Homeஉள்ளூர் செய்திகள்எரிபொருள் விலை திருத்த அறிவிப்பை வெளியிட்டது சீன நிறுவனம்

எரிபொருள் விலை திருத்த அறிவிப்பை வெளியிட்டது சீன நிறுவனம்

எரிபொருள் விலைகளை இன்று மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்வதாக சீன நிறுவனமான சினோபெக் அறிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த விலை மாற்றம் வெளியிடப்படாத நிலையில் சீன எரிபொருள் விநியோக நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி 95 ஒக்ரைன் பெற்றோலின் விலை ஒரு லீற்றர் 6 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 420 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும் 92 ஒக்ரைன் பெற்றோலின் விலை மாற்றமின்றி லீற்றர் ஒன்று 358 ரூபாயாகத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரித்து 348 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் ஒன்றின் விலை 61 ரூபாயினால் அதிகரித்து 417 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular