எல்பிஎல் தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பம்

2021 லங்கா பிரீமியர் லீக் (LPL) இன் காலி கிளாடியேட்டர்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த ஆண்டு போட்டியைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி கடந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் சம்பியன்ஷிப்பை வென்றது.