ஏஎல் பரீட்சைக்கு 2,922; ஸ்கொலர்ஷிப் பரீட்சைக்கு 6,589 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைத்தன – கல்வி அமைச்சு

2021ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 2 ஆயிரத்து 922 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 6 ஆயிரத்து 589 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

- Advertisement -

இந்த 2 பரீட்சைகளுக்குமான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட இறுதித் திகதி இன்றுடன் முடிவடைந்தது.
பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை அதிபர்கள் மூலம் கல்வி அமைச்சிற்கு அனுப்ப வேண்டும்.

எவ்வாறாயினும், தற்போது சம்பள முரண்பாடுகள் காரணமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அதிபர் தொழிற்சங்கங்கள் உயர்தர மாணவர்களின் விண்ணப்பங்களை அங்கீகரிக்கப் போவதில்லை என்று சமீபத்தில் முடிவு செய்தன.

அதன்படி, கல்வி அமைச்சில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

நாட்டில் கோரோனா வைரஸ் நிலமை காரணமாக அமைச்சு இதுவரை பரீட்சை திகதிகளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!