ஏப்ரல் 11,12ஆம் திகதிகளில் வங்கிகள் இயங்கும்

நாளைமறுதினம் ஏப்ரல் 11 திங்கட்கிழமை மற்றும் மறுநாள் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும் அனைத்து வங்கிகளும் வழமைபோன்று இயங்கும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அரச நிறுவனங்களை குறித்த இரண்டு நாள்களும் திறப்பதனால் செலவு அதிகரிக்கும் என்பதனால் பொது விடுமுறை வழங்கப்பட்டதாக பொதுச் சேவைகள் அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை விடப்பட்டது.

இந்த நிலையில் வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஏப்ரல் 11, 12ஆம் திகதிகளில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.