Sunday, May 28, 2023
Homeஅரசியல்ஏப்ரல் 25 முழுக் கடையடைப்புக்கு யாழ்ப்பாணம் வணிகர் கழகம் ஆதரவு

ஏப்ரல் 25 முழுக் கடையடைப்புக்கு யாழ்ப்பாணம் வணிகர் கழகம் ஆதரவு


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அழைப்பில் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ள வடக்கு கிழக்கு தழுவிய முழுக் கடை அடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் வணிகர் கழகமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்திற்கும் தமிழ் கட்சிகளின் பிரதிகளுக்கும் இடையிலான சந்திப்பு வணிக கழகத்தில் இடம் பெற்றது.

இதன்போது யாழ்ப்பாணம் வணிகர் கழகம் அனைத்து கடைகளையும் பூட்டி முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்தது.

சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், பா.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular