Sunday, May 28, 2023
Homeஅரசியல்ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

இன்று மாலை நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அவர் 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் (UNF) வேட்பாளராகப் போட்டியிட்டார், ஆனால் கோத்தாபய ராஜபக்சவிடம் தோல்வியடைந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கையின் முதன்மை எதிர்க்கட்சியாகும். இது 2020 இல் ஐக்கிய தேசிய முன்னணியின் பிளவுக்குப் பின் உருவாக்கப்பட்டது. கட்சி தற்போது சஜித் பிரேமதாச தலைமையில் உள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக நடத்துவதற்கான அரசின் பிரேரணைக்கு எதிர்க்கட்சிகள் தமது ஆதரவை வழங்கும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரசு ஜனாதிபதித் தேர்தலை தமது வசதிக்காகவும், தங்களுக்கு வசதியான காலக்கெடுவிற்கும் ஏற்ப நடத்த முயற்சிப்பது ஜனநாயகத்தை மீறுவதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியோ அல்லது அவருக்கு ஆதரவானோரின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி தேர்தலை திட்டமிடுவது தவறானது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை விரைவில் நடத்துவதற்குத் தேவையான சட்டவிதிகளை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் தமது ஆதரவை வழங்கும் என்றும் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular