ஐபிஎல் தொடர் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு

கோரோனா தொற்றால் கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், ஐ.பி.எல். டி-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.

முன்னதாக, கொல்கத்தா அணி வீரர்கள் சந்தீப் வாரியார், வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் ஐதராபாத் அணியின் விருத்திமான் சஹா, டில்லி அணியின் அமித் மிஸ்ரா மற்றும் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் உதவியாளர் ஒருவருக்கும் கோரோனா தொற்று ஏற்பட்டது.

- Advertisement -

இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14வது ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மொத்தம் 60 போட்டிகளில் 29 போட்டிகள் இதுவரை நடந்து முடிந்துள்ளன. மே 30ஆம் வரை நடக்க இருந்த இந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற போட்டிகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!