வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி முழுக் கடையடைப்புக்கு தமிழ் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.
முல்லைத்தீவு நீதிபதி த.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியமை தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும்- கண்டித்தும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் முழுக் கடையடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன.
முழுக் கடையடைப்பு தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இன்று (ஒக்.09) பிற்பகல் 3.15 மணியளவில் ஆரம்பமானது.
இதன்போதே எதிர்வரும் 20ஆம் திகதி முழுக் கடையடைப்புக்கு தமிழ் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.