ஒரு லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல்

ஒரு லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது..

நாட்டு மக்கள் மீது மேலும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் அரிசி விலையை உயர்த்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகச் சுட்டிக்காட்டி வர்த்தக அமைச்சரினால் அமைச்சரவைக்கு இந்த முன்மொழிவு செய்யப்பட்டது.

- Advertisement -

நெல் மற்றும் அரிசியை அசாதாரணமான முறையில் பதுக்கும் நோக்கில் அரசி ஆலை உரிமையாளர்கள் செயற்படுவதால், அரிசியின் செயற்கை பற்றாக்குறையை நீக்க இந்த இறக்குமதி ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்த சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூர் விவசாயிகள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாப்பதற்காக அரிசி மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், பொது நலனையும் அரச கொள்கையையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அரசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களால் இந்த விலை உயர்வைத் தொடர இடமளிக்காது 100,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் வர்த்தக அமைச்சரினால் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!