2022 (2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 28ஆம் திகதிக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
விண்ணப்பங்கள் தற்போது இணையவழி மூலம் மட்டுமே திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
2023 பெப்ரவரி முதலாம் திகதி முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதன்படி எதிர்வரும் 28ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபர்கள் ஊடாக பரீட்சைக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தனியார் விண்ணப்பதாரர்கள் தேவையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தாங்களாகவே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விண்ணப்பங்களை www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic அல்லது பரீட்சை திணைக்களத்தின் ‘Exams Sri Lanka’ என்ற அலைபேசி செயலி ஊடாக சமர்ப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.