ஓகஸ்ட், டிசெம்பர் பாடசாலை தவணை விடுமுறை நாள்கள் குறைக்கப்படும் – கல்வி அமைச்சர்

விடுபட்ட பாடத்திட்டத்தை ஈடுசெய்யும் வகையில் ஓகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாத பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

“கோரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில் இருந்த நிலமையில் இருந்து இன்றைய நிலமை வேறுபட்டுள்ளது. தற்போதைய பிரச்சினைகள் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் நெருக்கடியால் இரண்டு நாள்கள் நீடிக்கும்.

ஆரம்ப தரங்களுக்கான ஆசிரியர்களுக்கு ஜூலை மற்றும் செப்டெம்பர் மாதங்களில் கூடுதல் பாடசாலை நாள்கள் இருக்கும். உயர்தர மாணவர்களுக்கு செப்டம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கூடுதல் கற்றல் நடவடிக்கைகள் உட்பட மீட்டல் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படும்.

வார இறுதிக்குள் எரிபொருள் நெருக்கடி ஓரளவுக்குத் தீர்க்கப்படும்” என்றும் என்றும் அமைச்சர் பிரேமஜயந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.