கஜேந்திரகுமாரின் கருத்து சரியானதா?

யாழவன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து , அதன் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று அந்தக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்திருக்கிறார்.

கடந்த பொது தேர்தலின்போதும் , அதற்கு முன்னரும் கட்சியின் கொள்கைக்கு மாறாக நடக்க முற்பட்டார் , கட்சியின் தலைமைக்கு எதிராக நடக்க முற்பட்டார் , தனி நபர் அணியை உருவாக்க முயன்றார் போன்ற 6 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விஸ்வலிங்கம் மணிவண்ணனை தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து ஏற்கனவே விலக்கியிருந்தார்கள் .

அதன் தொடர்ச்சியாக , சட்டத்தரணி விஸ்வலிங்கம்
மணிவண்ணனின் உறுப்புரிமையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது . இவ்வாறு மணிவண்ணன் மேல் நடடிக்கை எடுத்தது சரியா பிழையா என்கிற வாதங்கள் சமூகவலை தளங்களை ஆக்கிரமித்து நிக்கிற இந்த வேளையில் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறிய விளக்கத்தின் ஒரு பகுதியை ஆராய விளைகிறது இந்த கட்டுரை.


ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பின்வருமாறு விடை கூறுகிறார்

” மணிவண்ணனின் தனிப்பட்ட திறமை அடிப்படையில் வாக்குகள் கிடைக்கவில்லை . கட்சியின் கொள்கைக்கே வாக்குகள் கிடைத்தன ” என்றார்

இந்த கருத்துக்கள் ஓரளவுக்கு ஏற்று கொள்ள கூடியவையே தவிர, இதுவே உண்மையானது இல்லை .
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் மக்களில் சிலர் சேர்ந்து உருவாக்கிய அமைப்பே தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகும் . சைக்கிள் சின்னம் மக்களிடையே பிரபலமான சின்னமாக இருந்தாலும் கூட அந்த சின்னத்தை பார்த்து மட்டும் மக்கள் வாக்களித்திருக்கவில்லை என்பது கடந்த கால தேர்தல்கள் நிரூபித்திருந்தன.

அதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன் வைத்த கொள்கையை பார்த்துதான் மக்கள் வாக்களித்திருந்தனர் என்கிற முடிவுக்கும் வந்துவிட முடியாது . பலர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேல் ஏற்பட்ட விரக்தியினால், வேறு தெரிவுகளில் சிறந்த தெரிவாக முன்னணியை தெரிவு செய்து , அதாவது முன்னணியில் நிப்பவர்கள் சரியானவர்கள் என்கிற முடிவுக்கு வந்து வாக்களித்தனர் என்பதே உண்மையானதாகும் .

கொள்கையை மட்டும் பார்த்துதான் வாக்களித்தார்கள் என்றால் யாரை நிறுத்தினாலும் அவருக்கு வாக்களித்து இருக்கனும். ஆனால் நல்லவர்கள் , மோசடி செய்யாதவர்களை நிறுத்துவத்துக்கு காரணமே ஆட்களை பார்த்தும் வாக்களிக்க வேண்டும் என்பதேயாகும் .

உள்ளூராட்சி சபைகளில் முன்னணி நிறுத்திய ஆட்களில் யார் நல்லவர்கள், செய்ய கூடியவர்கள் என்பதை பார்த்துதான் மக்கள் வாக்களித்திருந்தனர் .

இன்றும் ஒரு லட்சத்துக்கு மேல் வாக்குகளை எடுத்தவர் செல்வராஜா கஜேந்திரன் என்று பரப்புரை செய்து , அந்த வாக்குகள் அவருக்கு விழுந்த வாக்குகள் என்று சொல்லி வந்த அவரது தீவிர ஆதரவாளர்களே மணிவண்ணனுக்காக வாக்குகள் விழவில்லை என்று சொல்வது வேடிக்கையானது .

ஒரு கட்சியில் ஏற்பட்ட விரக்தியில் வேறு கட்சி ஒன்றுக்கு வாக்களிக்க முனையும் ஒருவர், அது எந்த கட்சி என்பதை தெரிவு செய்ய அந்த கட்சியில் இருக்கும் ஆட்களையும் பார்க்கிறார்கள். அந்த வகையில் கூட்டமைப்பில் ஏற்பட்ட விரக்தியின் மூலம் இந்த சைக்கிள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற முடிவுக்கு ஆட்கள் வர கஜேந்திரகுமார், கஜேந்திரன் போன்ற தனி மனித விம்பங்கள் காரணமாக இருந்தது போல இன்னும் சிலரும் காரணமாக இருந்தார்கள் . அந்த வரிசையில் சின்னத்தம்பி வரதராஜன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரத்தினம் சுகாஷ் போன்றோரும் உள்ளடங்குவார்கள்.

கடந்த தேர்தலில் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் கனகரத்தினம் சுகாஷ் போன்றோருக்காக கட்சிக்கு மக்கள் வாக்களித்திருந்தனர் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி மூன்று தொகுதியில் தான் இரண்டாவது இடத்துக்கு வந்தது. மற்றைய இடங்களில் மூன்றாவது அல்லது நான்காவது இடங்களை பிடித்தது

சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி மானிப்பாய், வட்டுக்கோட்டை மற்றும் நல்லூர் தொகுதிகளில் முறையே 6 ஆயிரத்து 999, 5 ஆயிரத்து 610 மற்றும் 8 ஆயிரத்து 386 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்துக்கு வந்திருந்தது. அதுவும் நல்லூர் தொகுதியில் வெறும் 37 வாக்குகளாலேயே தமிழ் அரசு கட்சி முன்னிலை பெற்றிருந்தது .மொத்தமாக இந்த தொகுதிகளில் 20 ஆயிரத்து 995 வாக்குகள் பெற்று இருந்தன .

இந்த மூன்று தொகுதிகளிலும் மக்கள் அந்த தொகுதியில் செல்வாக்காக இருந்த விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் கனகரட்ணம் சுகாஷ் ஆகியோருக்காகவும் வாக்களித்து இருந்தார்கள் என்பது தெளிவாகிறது . இந்த இடங்களில் கட்சி இரண்டாவது இடத்துக்கு வந்திருந்தது அதற்கு சாட்சியாக இருக்கிறது.

இன்னும் ஆழமாக பார்த்தோமானால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரை விட விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் கனகரட்ணம் சுகாஷ் ஆகியோரையே மக்கள் விரும்பியிருந்தனர் . தலைவர் செயலாளர்களுக்கு வாக்கு போட சொல்லி எல்லா வேட்பாளர்களும் கேட்டிருந்தார்கள் . ஆனால் மற்றைய வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு அவர்களால் மட்டுமே கேட்கப்பட்டது . அதாவது விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் கனகரட்ணம் சுகாஷ் ஆகியோருக்கு விழுந்த விருப்பு வாக்குக்கள் அவர்கள் மட்டுமே கேட்டு பெற்றவை ஆகும் .

அதாவது கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் பெற்ற விருப்பு வாக்கில் மற்றவர்களின் பங்கும் உள்ளது .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் போல, தலைவர் செயலாளர்களை முன்னிலைபடுத்தாமல் வாக்கு கேட்டிருந்தால் மணிவண்ணன் மற்றும் சுகாஷ் ஆகியோர் முன்னிலை பெற்றிருந்திப்பார்கள்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரின் சொந்த தொகுதிகளான பருத்தித்துறை மற்றும் உடுப்பிட்டி தொகுதிகளில் முறையே 4 ஆயிரத்து 158 மற்றும் 3 ஆயிரத்து 868 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திலேயே கட்சி இருந்தது.

எனவே விஸ்வலிங்கம் மணிவண்ணனின் தனிப்பட்ட ஆளுமை அல்லது செல்வாக்கு கட்சிக்கு வாக்கு பெற்று தந்திருக்கவில்லை என்கிற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வாதம் பிழையானதாகும் .

அது பிழையானது என்பது அவரது உள் மனசும் ஏற்று கொண்டிருக்கும் என்றே கருதுகிறோம்.

- Advertisement -
- Advertisement -

Must Read

கோவிட் -19 தடுப்பூசி ஏற்றும் பணி நாளை மேல் மாகாணத்திலுள்ள 6 வைத்தியசாலைகளில் ஆரம்பம்

இந்திய அரசு வழங்கிய கோவிட்-19 தடுப்பூசிகளின் முதல் தொகுதி இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயினால் இன்று (28) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி கோத்தாபய...
- Advertisement -

கலாசார சீரழிவில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்பட்ட நால்வரும் விளக்கமறியலில் – மல்லாகம் நீதிமன்றின் உத்தரவில்

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இளம் பெண் கலாசார சீரழிவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்...

நயினாதீவு ஆலய அறநெறி மாணவர்களுக்கு இசைக்கருவிகளை வழங்கிவைத்தது இந்தியா

நயினாதீவு ஆலயத்தில் அறநெறி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் இந்தாயாவினால் இசைக் கருவிகள் ஆலய நிர்வாகத்திடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டன.  தைபூச நன்னாளில் (ஜனவரி 28, 2021), இந்தியத் துணைத்தூதுவர் பாலச்சந்திரன் இலங்கை ரூபாய் 2 லட்சம்...

கோவிட் -19 தடுப்பூசிகள் ஏற்றிய இந்திய விமானம் கட்டுநாயக்கவில் வந்திறங்கியது

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஏஐ-281 இந்திய அரசு நன்கொடையாக வழங்கிய 5 லட்சம் ஒக்ஸ்போர்ட் கோல்ஷூல்ட் கோவிட்-19 தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு இன்று முற்பகல் 11.35 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச...

Related News

கோவிட் -19 தடுப்பூசி ஏற்றும் பணி நாளை மேல் மாகாணத்திலுள்ள 6 வைத்தியசாலைகளில் ஆரம்பம்

இந்திய அரசு வழங்கிய கோவிட்-19 தடுப்பூசிகளின் முதல் தொகுதி இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயினால் இன்று (28) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி கோத்தாபய...

கலாசார சீரழிவில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்பட்ட நால்வரும் விளக்கமறியலில் – மல்லாகம் நீதிமன்றின் உத்தரவில்

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இளம் பெண் கலாசார சீரழிவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்...

நயினாதீவு ஆலய அறநெறி மாணவர்களுக்கு இசைக்கருவிகளை வழங்கிவைத்தது இந்தியா

நயினாதீவு ஆலயத்தில் அறநெறி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் இந்தாயாவினால் இசைக் கருவிகள் ஆலய நிர்வாகத்திடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டன.  தைபூச நன்னாளில் (ஜனவரி 28, 2021), இந்தியத் துணைத்தூதுவர் பாலச்சந்திரன் இலங்கை ரூபாய் 2 லட்சம்...

கோவிட் -19 தடுப்பூசிகள் ஏற்றிய இந்திய விமானம் கட்டுநாயக்கவில் வந்திறங்கியது

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஏஐ-281 இந்திய அரசு நன்கொடையாக வழங்கிய 5 லட்சம் ஒக்ஸ்போர்ட் கோல்ஷூல்ட் கோவிட்-19 தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு இன்று முற்பகல் 11.35 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச...

பெப். 4இல் கிளிநொச்சியில் கறுப்பட்டிப் போராட்டம்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் அடையாள உணவு ஒறுப்பு போராட்டம் ஒன்றை வரும் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து 6ஆம் திகதி வரை நடத்த...
- Advertisement -
error: Alert: Content is protected !!