ஜூன் மாதம் முதல் புதிய முறைமையின் கீழ் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டுகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.
கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் கைரேகைகளை வழங்கக்கூடிய 50 பிரதேச செயலகங்களை தாங்கள் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் நாயகம் குறிப்பிட்டார்.
கைரேகை இயந்திரங்கள் ஏற்கனவே சரி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
விண்ணப்பதாரர்கள் இணையம் மூலமாகவோ அல்லது இலங்கை வங்கியின் கிளைகளுக்குச் சென்று தேவையான கொடுப்பனவுகளைச் செய்ய முடியும் என கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டார்.
புதிய திட்டம் ஜூன் 1 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.